Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்- ஷங்கரின் இந்தியன்-2 பட முக்கிய தகவல்

கமல்- ஷங்கரின்  இந்தியன்-2 பட முக்கிய தகவல்
, வியாழன், 28 ஜூலை 2022 (23:06 IST)
கமல்- ஷங்கரின்  இந்தியன்-2 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த எதிர்பார்ப்பை பூத்தி செய்யும் வகையில்,விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில்  உதயநிதி ஸ்டாலின், இந்தியன்-2 படம் தொடங்கப்படும் என தெரிவித்தார்...

இந்த நிலையில், வரும் செப்டம்பரில் மாதம் முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகிறது..

தற்போது அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் இந்தியா திரும்புவதற்கும், ராம்சரண் படத்தை ஷங்கர் முடிப்பதற்குமான காலத்தில் இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்- துல்கர் சல்மான்