நடிகர் சிவக்கார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மெகா சயின்ஸ்பிக்ஷன் படம் மற்றும் எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஒரு காமெடிப் படம் என நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தததை அடுத்து தற்போது சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். வேலைக்காரன் மற்றும் சீமராஜா வியாபாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கடன் சுமையால் தவித்து வருகின்றனர். நடிகர் சிவக்கார்த்திக்கேயனும் அவருடைய ஆஸ்தான தயாரிப்பாளருமான ஆர் டி ராஜாவும்.
இந்த கடன்சுமைக்குக் காரணமாக சொல்லப்படுவது வேலைக்காரன் மற்றும் சீமராஜா படங்களின் தேவை இல்லாத அதிகப்படையான தயாரிப்பு செலவுகளே. வேலைக்காரன் படத்திற்காகப் போடப்பட்ட கூலிக்காரன் குப்பம் செட்டை படப்பிடிப்பு முடிந்த பின்னும் கலைக்காமல், ரசிகர்களின் பார்வைக்காக வைத்திருந்தது படக்குழு. அதற்காக அந்த இடத்திற்குக் கொடுக்கப்பட்ட வாடகை பல லட்சங்கள் என சொல்கின்றனர் சினிமாக்காரர்கள்.
அதேப்போல சீமராஜா படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக தேவையே இல்லாமல் 8 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இருந்தும் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற தேவையில்லாத செலவுகள், அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது போன்ற காரணங்களால்தான் இருவரும் கடனாளிகளாக ஆகியிருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.
எனவே தற்போது குறைந்த செலவில் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் இருவருமே உள்ளனர். அதனால் இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒனறான இரும்புத்திரைப் படத்தின் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்க முடிவு செய்துள்ளார் சிவகார்த்திக்கேயன். டிசம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரல் அல்லது மேயில் வெளியிட இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்த சிவக்கார்த்திக்கேயன் இப்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், ஒரு முக்கியக் கதாபத்திரத்தில் சிவக்கார்த்திகேயனோடு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸும், இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தோழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.