Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்யராஜ் திடீர் ராஜினாமா : காரணம் இதுவா...?

Advertiesment
Bhagyaraj
, வெள்ளி, 2 நவம்பர் 2018 (13:57 IST)
சர்கார் பட விவகாரத்தில் நான் எவ்வளவோ கெஞ்சியும்  முருகதாஸ் கேட்கவில்லை. உடன் படவுமில்லை.அதனால் வேறு வழியின்றி சர்கார் கதையை நான் வெளியே சொல்லை நேர்ந்தது. சன்பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்திடம் நான்  மன்னிப்பு கோருகிறேன்! ஏன் திடீர் ராஜினாமா எனவும் இயக்குனரும், எழுத்தாளர்கள் சங்க தலைவருமான கே.பாக்யராஜ்  தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.

சார்கார் சர்ச்சையால்தான் பாக்கியராஜ்  பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.இந்த சர்கார் பட விவகாரத்தில் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. எனக்கு நேர்ந்துள்ள அசௌகரியங்கள் மற்றும் ஒழுங்கீனங்களை நான் சங்கத்தின் நலன் கருதி வெளியே சொல்லவில்லை என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் கே.பாக்கயராஜ் எழுத்துப் பூர்வமாக  தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
 
சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என பாக்யராஜ் கூறியிருந்தார். எனவே முருகதாஸ் இது ஒருதலை பட்சமானது என விமர்சித்தார். இதனையடுத்து இன்று தென்னிந்திய  எழுத்தாளர் சங்க தலைவர் பாகியராஜ் தன் பதவியை ராஜினாக செய்தார். இந்த விவகாரத்தில் பல அரசியல் தலையீடுகள் இருக்கலாம் எனவும் பொது வெளியோடு சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியதிருக்கிறது. இத்தனைக்கும் தன் வேலை உண்டு தான் உண்டு என இருக்கிறவர் பாக்யராஜ். அவர் எம்.ஜி.ஆர்.பதவியில் இருக்கும் போது  அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்தார். ஆனால் அவரால் அரசியலில் சோபிக்க முடியவில்லை. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக பாக்கியராஜை அறிவித்தும் கூட அவரால் அரசியல் வானில் பிரகாசிக்க முடியவில்லை. இதற்காக அவர் யார் மீதும் அரசியல் வசை பாடவில்லை. இதிலிருந்து அவர் பொது வாழ்க்கைக்கு வராமல் இருந்தாலும் கூட தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணியிலும் திறம்படவே மரியாதையுடன் தான் வாழ்ந்து வருகிறார்.பத்திரிக்கையாளராகவும்,எழுத்தாளராகவும் (பாக்யா)தன் பணியை தொடர்கிறார். 
 
இந்நிலையில் இது குறித்து அவர் இன்று கூறியபோது, தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்துக்கு போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இத்தனை அசௌகரியங்கள் தான் சந்திக்க நேர்ந்தது. எனவே இதுபற்றி நான் வெளியே சொல்ல தேவையில்லை. சங்கத்தின் நலம் கருதி என்பதாக பக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
 
இவ்வளவு வருடம் திரைத்துறையில் அனுபவமுள்ள  பாகியராஜுக்கே உள்ளிருந்து இத்தனை அழுத்தம் என்றால் இதை என்னவென்று சொல்வது...? மேலும் பாக்யராஜ் பேசும் போது, சங்கம் தற்போது உள்ள நிலையில் தேர்தல் வேண்டுமா..? என பலரும் கேட்கலாம். ஆனால் சங்கம் சீர்கெட்டுப் போவதை விட முறையாக தேர்தலை சந்திப்பது நலம் பயக்கும் என்று  திரையுலகின் நன்மை கருதி இதை கூறுகிறேன் என்றார்.இதனையடுத்து செய்தியாளர்கள் இந்த நிர்பந்தத்திற்கு என்ன காரணம்..? என கேட்ட போது, இன்னும் இரண்டு நாள் கழித்து இதனை சொல்லுகிறேன். என அவர் கூறியுள்ளார்.
 
கலைத்துறையில் அரசியல் நுழையும் போது ,அங்கே காழ்புணச்சியும் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாம்பாக படையெடுத்து கலைஞர்களின் வாழ்கையை மட்டுமல்ல, அந்த உன்னதமான கலையையும் கொத்தி உள்ளுணர்வினைத் தரைதாழ்த்திவிடும் என்பதால்  இந்த விஷயத்தைப் பொதுக்கண்ணொடு நாம் விமர்சிக்க வேண்டியதுள்ளது. இத்தனை விமர்சனங்களை தாண்டி தீபாவளிக்கு வெளிவரும் சர்கார் கள்ள ஓட்டுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துமோ இல்லையோ கட்டாயமாக இனி வரும் காலத்தில் கள்ளக் கதைகளை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் அது தெரிந்தால் எந்த மாதிரி விதத்தில் நீதியை நிலைநாட்ட போராட வேண்டும் என்ற பாடத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே போதித்துவிட்டது இந்த சர்கார் கதை விவகாரம்.
 
குறிப்பாக யாரையும் நம்பி இனி கதையோ காட்சியோ விளக்கக்கூடாது. கருப்பு ஆடு எங்கு வேண்டுமானாலும் ஒளிந்திருக்கும். ஒருவேளை அந்த கருப்பு ஆட்டைக் கண்டு பிடித்ததால் நீதியை நிலைநாட்டுபவர்க்கு பாக்கியராஜ் போன்று சில அசௌரியங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்...?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகதாஸிடம் கெஞ்சினேன்: ராஜினாமா செய்த பாக்யராஜ் உருக்கம்