சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவர் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதனையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும், 'இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கவுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்த 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்தது. தற்போது இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.
 
									
										
			        							
								
																	சென்சாரில் 'கனா' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
									
										
										
								
																	
	சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  திபு நைனன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.