நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் நான்காவது ஒரு படத்தில் சிறுத்தை சிவா மற்றும் சன்பிக்சர்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
வேலைக்காரன் மற்றும் சீமராஜா தோல்விகளை அடுத்து நடிகர் சிவக்கார்த்திகேயன் அதிரடியான சில முடிவுகளை எடுத்து வருகிறார். பெரும் கடன்சுமையில் சிக்கியுள்ள தற்போது அதிலிருந்து மீள ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ்பிக்ஷன் படம் ஒன்றிலும், எம் ராஜேஷ் இயக்கும் நகைச்சுவை படத்திலும் நடித்து வருகிறார். அதையடுத்து இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கும் சிறிய பட்ஜெட் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்க இருக்கிறது.
இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படம் ஒன்றில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா தற்போது அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது, அதன் பின்னர் இவர்கள் இணையும் புதியப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.