Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயனின் இரங்கல் டுவிட்!

Webdunia
திங்கள், 25 மே 2020 (13:03 IST)
சிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயனின் இரங்கல் டுவிட்!
இந்தியாவின் கடைசி குறுநில மன்னரான சிங்கம்பட்டி ஜமீன்தார் அவர்கள் காலமானார் என்ற செய்தி இன்று அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு அரசியல்வாதிகள் திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன்தார் கேரக்டரில் ’சீமராஜா’ என்ற படத்தில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயனும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா! அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’என்று கூறியுள்ளார்.
 
அதுமட்டுமின்றி சீமராஜா படத்தின் படப்பிடிப்பின்போது சிங்கம்பட்டி ஜமீன்தாருடன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சீமராஜா திரைப்படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் சிங்கம்பட்டி ஜமிந்தார் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியிருப்பார் என்பது அந்த படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘லோகா’… தேதி இதுதான்!

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments