“அந்த ரோலுக்காக காத்திருக்கிறேன்…” ரசிகரின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:17 IST)
சிவகார்த்திகேயன் நேற்று ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் பலரும் கேள்விகளை கேட்டனர். ஒரு ரசிகர் “உங்களிடம் இருந்து எப்போது ஒரு முழு ஆக்‌ஷன் டபுள் ரோல் வேடத்தை எதிர்பார்க்கலாம்” எனக் கேட்டிருந்தார்.

”இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆசை உள்ளது. அதற்கு தகுந்த கதை அமையும் போது நான் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments