Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் வெளியாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:11 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாளை ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ (Chhello Show)” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் சோர்வடையாத ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை வேறுவிதத்தில் ஆஸ்கர் ரேஸில் நுழைத்துள்ளார். ”For your Consideration” என்ற சிறப்பு பிரிவின் மூலமாக ஆஸ்கர் விருதுக்கு பல பிரிவுகளில் விண்ணப்பித்துள்ளது ஆர்.ஆர்.ஆர்.

இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜாப்பனீஸ் மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு நாளை முதல் ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ராஜமௌலி, ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments