Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!
, திங்கள், 17 அக்டோபர் 2022 (16:03 IST)
சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருடம் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றதை அடுத்து அடுத்த ஆண்டு மே 13 ஆம் தேதி மாவீரன் ரிலீஸ் ஆக வேண்டும் என சிவகார்த்திகேயன் விரும்புகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… கண்டுகொள்ளாத ஆந்திர சினிமா!