Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
, புதன், 6 ஜூலை 2022 (09:01 IST)
சிவகார்த்திகேயன் அடுத்து மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகையின் தயாரிப்பில் நடிக்கும் சமந்தா!