Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்: குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

’அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்: குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
, வியாழன், 26 நவம்பர் 2020 (19:39 IST)
’அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ’அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இடையிடையே இடைவெளி விட்டு நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் 
 
இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் இந்த படத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக மட்டும் 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் 2022ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று  கூறப்படுகிறது 
 
மேலும் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாகவும் இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அட்லீயின் உதவி இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியுடன் சாந்தனு நடிக்கும் படத்தின் டைட்டில்!