Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தீபாவளி படங்களுக்கு நிம்மதி..!

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தீபாவளி படங்களுக்கு நிம்மதி..!
, சனி, 23 செப்டம்பர் 2023 (16:49 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றும்  கிராபிக்ஸ் காட்சிகளையும் பணி அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்  
 
இதனை அடுத்து பொங்கலுக்கு இந்த படம் பிரமாண்டமாக வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்திசிங் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் நடிகை எஸ்தர் அனிலின் கிளாமரஸ் போட்டோஷூட்!