Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

vinoth

, வியாழன், 11 ஜனவரி 2024 (07:50 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு வரிக் கதையை சொல்லியுள்ளதாகவும் அது அவருக்கு பிடித்துள்ளதால் இப்போது அடுத்த கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தயாரிப்பாளருக்கு அடித்த ஜாக்பாட்… ரஜினி கொடுத்த வாக்கு!