Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நக்கலைட்ஸ் குழுவினர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக மணிகண்டன்!

Advertiesment
நக்கலைட்ஸ் குழுவினர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக மணிகண்டன்!
, செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:25 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா, உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது சம்மந்தமாக நக்கலைட்ஸ் சார்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் “அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்,

நக்கலைட்சின் ஏழாண்டுப் பயணம் இன்று புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது.  நாம் நம்முடைய முதல் முழுநீளத் திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியிருக்கிறோம். நக்கலைட்சின் ரசிகர்களிடம் இந்த இனிப்பான செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உங்களின் அன்பும் ஆதரவும் இன்றி இது சாத்தியமில்லை.  நமது இயக்குநர் ராஜேஷ்வர்  இயக்கத்தில் பிரசன்னா பாலச்சந்திரனின் திரைக்கதை வசனத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில், குட்நைட் திரைப்படப் புகழ் மணிகண்டன் அவர்கள் கதாநாயகனாக நடிக்கிறார். மேக்னா சான்வே கதாநாயகியாகவும் , இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சுஜித் ஒளிப்பதிவு செய்ய கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். நக்கலைட்சின் மற்றும் பல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்கும் இத்திரைப்படத்திற்கு என்றும்போல் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.” என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்..!