பிரபல தமிழ் நடிகரான சிவகார்த்திகேயன் தானே படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர சினிமா பாடல் வரிகள் எழுதுவது, பாடுவது என பல துறைகளிலும் கால்பதித்த சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனராகவும் ஆக உள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக அறிமுகமாகி ஆஸ்திரேலியா வரை சென்று இந்திய அணி போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் நடராஜனின் வாழ்க்கையைதான் சிவகார்த்திகேயன் படமாக இயக்குகிறாராம். இந்த படத்தில் நடராஜனாக சிவகார்த்திகேயனே நடிக்கவும் உள்ளார். இந்த தகவலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடராஜனே கூறியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.