ஒரு திரைப்படம் நஷ்டம் அடைந்தால் அதை வெளியே சொல்லி புலம்புவதும் லாபம் வந்தால் கமுக்கமாக இருந்து கொள்வதும் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் குணமாக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது முதல் பட தயாரிப்பான 'கனா' படத்தின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நேற்று நடந்த 'கனா' வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ''கனா' திரைப்படம் நான்கு முக்கிய படங்களுடன் வெளிவந்தது. ஹீரோ இல்லாத இந்த படத்தை இந்த போட்டியில் வெளியிட வேண்டுமா? என்று சிலர் என்னிடம் கூறினர். ஆனால் எனக்கு அருண்காமராஜ் மீது இருந்த நம்பிக்கையால் இந்த படத்தை தைரியமாக வெளியிட்டேன். படமும் வெற்றி பெற்றது
இந்த படத்தில் கிடைத்த லாபத்தின் ஒரு பங்கினை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அறிவிப்போம் என்று கூறிய சிவகார்த்திகேயன், இந்த படத்தை இயக்க எனது நண்பர் அருண்காமராஜுக்கு வாய்ப்பு கொடுத்தது நான் செய்த உதவியாக சிலர் கூறினர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இதை ஒரு கடமையாக பார்க்கின்றேன். நான் செய்த உதவியோ, கடமையோ, அதை எனக்கு இருமடங்கு திருப்பி செலுத்திவிட்டார் அருண்காமராஜ்' என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன பேசினார்.