Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

Advertiesment
Amaran Movie Review

vinoth

, புதன், 13 நவம்பர் 2024 (14:30 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31, தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது.

தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அமரன் படம் முதல் நாளில் சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து முதல் நாளிலேயே பிளாக்பஸ்டர் ஹிட்டை அறிவித்தது.

இதையடுத்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தை, வழக்கம்போல நான்கு வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்யக் கூடாது எனவும் 8 வாரங்கள் கழித்தே ரிலீஸ் செய்யவேண்டும் எனவும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?