Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் & முதல் லுக் டீசர்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:57 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1952 ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் இன்றளவும்  பேசப்படும் அரசியல் சினிமாவாக உள்ளது. இந்நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் சம்மந்தப்பட்ட கதைக்கு அந்த தலைப்பை மீண்டும் பயன்படுத்த உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும். ஆனால் இந்த தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ‘சிவகார்த்திகேயன் 25’ படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments