Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

சீதக்காதி படம் குறித்து பரபரப்பு தகவல்

Advertiesment
vijay sethupatjhy.m seetha kathy
, சனி, 8 டிசம்பர் 2018 (20:09 IST)
விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தான் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் நாடக கலைஞராக இருந்து, புகழ் பெற்ற திரைப்பட நடிகராக உயரும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் நடிக்க மறுத்து விடுகிறார். அதன் பிறகு அவரது புகழுக்கு பங்கம் வருகிறது  ஏன், அப்படி ஒரு முடிவை எடுத்தார், அய்யாவாக வரும் விஜய் சேதுபதி யார், அவரின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளால் ஏற்படும் திருப்பமே சீதக்காதி படத்தின் கதையாக இருக்கும் எற எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீதக்காதி படம் திரில்லர் நிறைந்த பேய் படம் என்றும் இணயத்தில் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது உண்மையா என்பது டிசம்பர் 20ம் தேதி தெரிந்துவிடும் .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தல கூட நடி தல' அரங்கத்தை அதிரவைத்த விஜய் சேதுபதியின் மாஸ் பதில்