தமிழ் சினிமாவின் உலகம் முழுவதும் எடுத்து சென்றதில் முக்கிய பங்கு மணிரத்னத்துக்கு உண்டு. இவர் சமீபத்தில் எடுத்த செக்க சிவந்த வானம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சி செய்து வருகிறார்.
இதில் ஆரம்பத்தில் விஜய், விக்ரம், சிம்பு என பலரை நடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால் கைகூடவில்லை. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2019 கடைசியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.