Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படுதோல்வி… இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா?

vinoth
வியாழன், 23 ஜனவரி 2025 (14:34 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களை இயக்கும் ஒரு இயக்குனராக உருவாகியுள்ளார் சிவா. அவர் இயக்கும் படங்கள் எல்லாம் மிகவும் சுமாரான கதை மற்றும் அரதப் பழசான மசாலாத்தன உருவாக்கம் என இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வாய்ப்பளிக்கின்றனர்.

இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். சமீபத்தில் அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் மோசமான எதிர்ம்றை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டவர் இயக்குனர் சிவாதான்.

இந்நிலையில் அவர் அடுத்த அஜித் படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அஜித் ரசிகர்கள் அவர் மட்டும் வேண்டாம் என புலம்பி வருகின்றனர். இந்நிலையில் இப்போது சிவா, அஜித் படத்துக்கான திரைக்கதைப் பணிகளில்தான் இப்போது ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் கடைசி பட டைட்டில் அறிவிப்பு எப்போது?.. வெளியான தகவல்!

ஜல்லிகட்டு சம்மந்தமான படம் என்பதால் பொங்கல் பண்டிகையைக் குறிவைக்கும் வாடிவாசல்!

விடாமுயற்சி படத்தை இயக்க அஜித் சார் இதனால்தான் தேர்ந்தெடுத்தார்.. மகிழ் திருமேனி பதில்!

டேய் நீ பெரிய அப்பாடக்கரா?... மிஷ்கினின் முகம்சுளிக்கும் பேச்சை தைரியமாகக் கண்டித்த முதல் நபர்!

ஒரு ஜப்பான் பொம்மைப்படத்துக்கு இவ்ளோ எதிர்பார்ப்பா? - இந்தியாவில் வெளியாகும் Attack on Titan!?

அடுத்த கட்டுரையில்
Show comments