Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலக்கப்போகும் "பிக்பாஸ் 3" போட்டியாளராக சிங்கப்பூர் திருநங்கை!

Advertiesment
கலக்கப்போகும்
, வெள்ளி, 17 மே 2019 (18:48 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனை சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தனர்.   
 
மேலும், மூன்றாவது சீஸனில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது. இதுவரை எம் எஸ் பாஸ்கர், ஆல்யா மானசா, ஸ்ரீரெட்டி என கூறிவரும் நிலையில் தற்போது பிரபல திருநங்கையான சாக்ஷி ஹரேந்திரன் பெயரும் போட்டியாளர்கள் பெயரில் அடிபட்டு வருகிறது.
 
சிங்கப்பூரை சேர்ந்த இவர் சமீப நாட்களாக  மெல்லலிய பெண் குரலில் அற்புதமாக பாடி அனைவர் நெஞ்சத்தையும் கொள்ளையடித்து சமூகவலைத்தளங்கள் முழுவதும் பரவலாக பேசப்பட்டு பலருக்கும் பரீட்சியமானவராக தென்படுகிறார். இந்நிலையில் தற்போது இவர் பிக்பாஸில் கலந்துகொள்ளப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் மகள் நிவேதா தாமஸ் ஆனால், நயன்தாரா அம்மா இல்லை! தர்பார் ட்விஸ்ட்!