Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் 3 ஷூட்டிங் எப்போது ? – கமல் விதித்த கண்டீஷன் !

Advertiesment
பிக்பாஸ் 3 ஷூட்டிங் எப்போது ? – கமல் விதித்த கண்டீஷன் !
, திங்கள், 13 மே 2019 (11:26 IST)
பிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி சீசன் 2 ஆகவும் ஒளிப்பரப்பானது. பிக் பாஸ் சீசன் 3 இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக சில பிரபலங்களின் பெயரும் வெளியானது. ஆனால் அது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பட்டியலை பிக்பாஸ் குழு உறுதி செய்து விட்டதாகவும் அதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் டீம் எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கமலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கமல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் படப்பிடிப்பைத் தொடங்க ஒத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் பாதகமான முடிவுகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கான மேடையாக இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கமல் பயன்படுத்த எண்ணியுள்ளாராம்.

அதனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் வருங்கால மனைவி யார் என்பது எனக்கு தெரியும்! பிரபல நடிகர்