பன்முகத்திறமை கொண்ட நடிகர் சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் சிம்புவை விட்டுக்கொடுத்ததேயில்லை. அவர் நிறைய படங்கள் நடிக வேண்டும், மீண்டும் பழைய மன்மதனாக பார்க்கவேண்டும். சிம்புவிற்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என சொந்த அண்ணன் போன்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ரசிகர்கள் அக்கறையுடன் இருப்பார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாவில் பன்னீர் மஸ்ரூம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீண்டநாட்களாக வைத்திருந்த தாடியை எடுத்துவிட்டு நீட் ஷேவ் செய்துக்கொண்டு மொழு மொழுன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "சிக்கன் டூ பன்னீர்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.