Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

Siva
திங்கள், 16 ஜூன் 2025 (18:21 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க போகிறார் என்பதும், இந்தப் படம் வடசென்னை குறித்த கதையம்சம் கொண்டது என்பதும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 'விடுதலை 2' போலல்லாமல், இந்த படத்தை குறுகிய காலத்தில் முடித்துவிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஏற்கனவே சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தை இயக்க இருந்த வெற்றிமாறன், அந்தப் படத்திற்கான சம்பளத்தை முழுவதுமாக வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளரும் தாணு என்பதால், 'வாடிவாசலுக்கு' பதிலாக சிம்பு படத்தை இயக்கி கொடுக்க வெற்றிமாறன் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு என தனியாக சம்பளம் எதுவும் கிடையாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தக் காரணத்தினால்தான் இந்த படத்தை விரைவாக முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு செல்ல வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments