சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில் சிம்பு ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டதாக சொல்லப்பட்டது. அதுபற்றி பேசியுள்ள சிம்பு “என்னுடைய 51 ஆவது படத்தை நானே இயக்கவேண்டும் என நினைத்தேன். அதைதான் இப்போது அஷ்வத் இயக்குகிறார். அதனால் நான் என்னுடைய 60 ஆவது படத்தை இயக்குவேன். எனக்கு அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை” எனக் கூறியுள்ளார்.