Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரைப் பின்னணியில் சிம்பு ஆடும் குத்துப்பாட்டு

மதுரைப் பின்னணியில் சிம்பு ஆடும் குத்துப்பாட்டு
, சனி, 3 ஜூன் 2017 (12:55 IST)
மதுரைப் பின்னணியில் சிம்பு ஆடும் குத்துப்பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. மூன்று வேடங்களில் சிம்பு  நடிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரேயா சரண், தமன்னா, சனா கான் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன்,  முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம், வருகிற 22ஆம் தேதி  ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்துக்காக மதுரைப் பின்னணியில் சிம்பு ஆடும் குத்துப்பாடல் ஒன்றைப் படமாக்கி வருகின்றனர். இதற்காக, 1980 காலகட்டத்தில் இருந்த மதுரை மாதிரியே சென்னை, கிண்டியில் செட் போட்டுள்ளனர். அப்போது பிரபலமாக இருந்த  ரஜினிகாந்த், கமல், டி.ஆர். போன்ற நடிகர்களின் போஸ்டர்களும் பின்னணியில் இருக்கிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷி கபூர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு