Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்தில் சிம்புதான் வில்லனா?... தீயாய்ப் பரவும் தகவல்!

vinoth
திங்கள், 28 ஏப்ரல் 2025 (10:57 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ‘ஜிங்குச்சன்’ படம் வெளியாகி வைரல் ஆனது.

இந்தப் படத்தில் சிம்பு கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சிம்புவுக்கும் கமலுக்கும் இடையே விறுவிறுப்பான சண்டைக் காட்சி ஒன்று படத்தில் உள்ளதகாவும், படத்தில் சிம்பு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் ‘லெஜண்ட்’ ஒளிப்பதிவாளர்!

‘அஜித்தின் அடுத்தப் படம் ஆதிக்குடன்தான்’… உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்!

‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு

சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல… என் வீட்டுக்காரர்தான் முதலில் சிக்ஸ் பேக் வச்சார்- பிரபல் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments