Publish Date: Thu, 02 Feb 2023 (10:06 IST)
Updated Date: Thu, 02 Feb 2023 (10:08 IST)
தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு சுமார் 500 ரூபாய் வரை உய்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய சென்னையை தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5475.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய் 43800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5837.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46696.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 130 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77300.00 எனவும் விற்பனையாகி வருகிறது