Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு 48 படத்தில் நான் நடிக்கிறேன்… பிரபல தொகுப்பாளர் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:48 IST)
சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெட் காரணமாக இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்த சிம்பு தானே அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஆட்மென் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் படம் ஆரம்பிக்கும் அறிகுறியே தெரியவில்லை.

ஆனால் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் ஒருபக்கம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் ஒரு வேடத்தில் நடிப்பதாக பிரபல தொகுப்பாளரும் பிக்பாஸ் போட்டியாளருமான அபிஷேக் ராஜா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் தாடி மீசை வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

கனடா நாட்டில் வாழும் தமிழ் பெண்ணின் போராட்டம் சொல்லும் படம் "ஆக்குவாய் காப்பாய்"

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments