Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியும் விஜய்யும் சந்திப்பது போல காட்சிகள் இருந்தது… வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:40 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதியில் சிஎஸ்கே போட்டியில் தோனி விளையாடுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த காட்சிகள் பழைய ஐபிஎல் போட்டிகளில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தன. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “தோனியும் விஜய்யும் க்ளைமேக்ஸ் காட்சியில் சந்திப்பது போல சீன்கள் இருந்தன. தோனியிடம் விஜய் இறுதிப் போட்டிக்கு வாழ்த்துகள் என சொல்லிவிட்டு செல்வார். எப்படியாவது இருவரையும் சேர்த்து வைத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எங்களால் தோனியைப் படத்தினுள் கொண்டுவரமுடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments