Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?

vinoth

, வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (16:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர்  இயக்கி வருகிறார். இந்த படத்தை மம்மூட்டியே தன்னுடைய ‘மம்மூட்டி கம்பெனி’ மூலமாக தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் “மிஸ்டர் டிடெக்டிவ்” என்று பெயர் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார்… இறுதிக்கட்டத்தில் ஷூட்டிங்!