Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈஸ்வரன் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஈஸ்வரன் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
, புதன், 30 டிசம்பர் 2020 (18:54 IST)
ஈஸ்வரன் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று சென்சார் ஆனதாகவும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்ததாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகும் என்றும் ஜனவரி இரண்டாம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி ஈஸ்வரன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரும் அவர் அறிவித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் மோத உள்ளதை அடுத்து இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றும் இருதரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்
 
ஏற்கனவே விஜய் நடித்த ’பகவதி’ சிம்பு நடித்த முதல் படமான ’காதல் அழிவதில்லை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விஜய் நடித்த ’ஆதி’ மற்றும் சிம்பு நடித்த ’சரவணா’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில மாதங்களாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராத நிலையில் ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிகு ஜிகு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் ரித்விகா!