Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
, வியாழன், 30 நவம்பர் 2023 (07:30 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார்.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். இப்படத்தை  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 15 அல்லது 21 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அழகான சதிகாரி’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் கனகராஜை அப்செட் செய்த வதந்தி…இதெல்லாம் யாருப்பா கெளப்பி விட்றது?