மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

vinoth
செவ்வாய், 24 ஜூன் 2025 (11:20 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த பெரிய பட்ஜெட் படத்தை சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இது சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக உள்ளது.

ஆனால் இப்போது சிம்புவின் 50 ஆவது படத்தில் ஒரு மாற்றம் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்புவை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 50 ஆவது படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments