Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு த்ரிஷா காதல் காட்சிகளை படமாக்கிய மணிரத்னம்?... தக் லைஃப் ஷூட்டிங் அப்டேட்!

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (09:28 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்றார் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷூட்டிங் முடிந்தததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மீண்டும் சில காட்சிகளை சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோரை வைத்து சிலக் காட்சிகளைப் படமாக்கினார். த்ரிஷா பரதநாட்டியம் ஆடுவதை சிம்பு பார்ப்பது போன்றுதான் அந்தக் காட்சிகள் படமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்கிறாரா சல்மான் கான்?

நடிகர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று ஒன்றும் இதுவரை கிழிக்கவில்லை: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments