இயக்குனரும் நடிகருமான சீமான் கடந்த சில வருடங்களாக படங்கள் இயக்கவில்லை. அரசியல் பிசி காரணமாக அவர் திரையுலகில் பணி புரிவதை தவிர்த்து வந்தார். இருப்பினும் ஒருசில படங்களில் அவர் நடித்து வந்தார். அவர் நடித்த 'தவம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் விஜய் நடிக்கும் 'பகலவன்' என்ற படத்தை சீமான் இயக்குவார் என்று கூறப்பட்டாலும் சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த படம் ஒருசில காரணங்களால் டிராப் ஆகிவிட்டதாகவும், ஆனால் அதற்கு பதிலாக சிம்பு நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிம்பு நடிக்கும் இந்த படம் 'பகலவன்' படத்தின் கதையா? அல்லது புதிய கதையா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் 'இந்த படம் தற்போதைய அரசியல் சூழல் குறித்த படம்' என்று சீமான் கூறியுள்ளதால் இந்த படம் ஒரு அரசியல் படம் என்பது உறுதியாகியுள்ளது
மேலும் இந்த படத்தில் சிம்பு டாக்டராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.