கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பரவியது.
இந்தக் கொரோனா வைரஸால் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த கொரொனா வைரஸில் 3 அலைகள் முடிந்துள்ள நிலையில்,4 வது அலை வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சீனா நாட்டில் கொரொனா மீண்டும் பரவி வருகிறது. எனவே, இதன் பாதிப்பை குறைக்கும் வகையில், அரசு முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, பெய்ஜீங்கில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது அதேபோல், ஓட்டல்களிலும், பள்ளி உணவகங்களிலும் மக்கள் அமர்ந்து சாப்பிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்குள்ள பூங்காங்களும் வணிக வளாகங்களும் மூட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.