Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!

Advertiesment
சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!

J.Durai

, புதன், 17 ஜூலை 2024 (13:51 IST)
தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. 
 
12-வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது.
 
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) -  தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 - SIIMA 2024 வெளியிட்டுள்ளது.‌ 
 
இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில்....
 
2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா ( SIIMA) விருதுக்குரிய படைப்புகளின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளோம்.‌ கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்-  மொழி எல்லைகளை கடந்து, தேசிய அளவில் பிராந்திய மற்றும் புதிய தேசிய அளவிலான பிரம்மாண்டமான வெற்றியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வலிமையான போட்டியாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள் என்றார். 
 
சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன. 
 
தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா'- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது. அதே தருணத்தில் நானி- மிருனாள் தாக்கூர் நடிப்பில் வெளியான 'ஹாய் நன்னா' திரைப்படமும் பத்து விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 
 
தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. 
 
இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மாமன்னன்: திரைப்படமும் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 
 
கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான 'காட்டேரா' எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. 
 
ரக்ஷித் ஷெட்டி- ருக்மணி வசந்த் நடித்த 'சப்த சாகரதாச்சே எல்லோ -சைடு ஏ 'திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 
 
மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் - ஆசிப் அலி நடித்த '2018' எனும் திரைப்படம் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மம்முட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியான 'காதல்- தி கோர் ' எனும் திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் லுக்.. விஜய்சேதுபதி-மஞ்சுவாரியர் மிரட்டல்..!