Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழிசை கூறுவது பொய்: சித்தார்த் விமர்சனம்...

Advertiesment
தமிழிசை கூறுவது பொய்: சித்தார்த் விமர்சனம்...
, வியாழன், 6 செப்டம்பர் 2018 (12:25 IST)
தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டார்.

 
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே. இதற்காக கைது செய்யப்பட்ட மாணவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக ஸ்டாலின் தமிழிசையை கடுமையாக விமர்சித்தார்.
 
இதற்கிடையே மாணவி சோபியா பாஜக ஒழிக என்று கோஷம் போட்டதற்காக கைது செய்யப்பட்ட செய்தி இந்தியா முழுதும் டிரெண்ட் ஆனது. இதற்காக சமூக வலைத்தளங்களில் தமிழிசையை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் தமிழிசையை விமர்சித்துள்ளார்.
 
டுவிட்டரில் சித்தார்த் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் "மாணவி சோபியா விமானத்துக்குள் கோஷமிட்டதாக கூறி வருகிறார். ஆனால், விமான நிலையத்தில் சோபியா கோஷமிட்டதாக செய்திகள் வருகின்றன. விமான நிறுவனம் பிரச்சனை நடந்ததாக, எந்த ஒரு புகாரும் இதுவரை எழுப்பவில்லை. எனவே விமானத்துக்குள் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுவது பொய்" என்று விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா மரணம்...