Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீசுக்கு தயாரான சிபிராஜ்ஜின் கபடதாரி படம்

ரிலீசுக்கு தயாரான சிபிராஜ்ஜின் கபடதாரி படம்
, புதன், 30 செப்டம்பர் 2020 (13:45 IST)
சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கபடதாரி' .கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்தை சத்யா சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தில் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரத்தில் நடிகை பூஜா குமார் நடித்துள்ளார்.
நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் நாசர், மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கி அனைத்து வேலைகளும் முடிவடைந்து பூஜையுடன் நிறைவு செய்துள்ளார். வருகிற நவம்பர்  மாதம் இப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசானின் ஆந்தாலஜி திரைப்படம்: ஐந்து இயக்குனர்களின் டைட்டில்கள் அறிவிப்பு!