Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி குடிக்கமாட்டேன் என்று சொன்னதை ஏன் வேறு மாதிரி பார்க்கிறீர்கள்? - ஸ்ருதி ஹாசன் வருத்தம்!

இனி குடிக்கமாட்டேன் என்று சொன்னதை ஏன் வேறு மாதிரி பார்க்கிறீர்கள்? - ஸ்ருதி ஹாசன் வருத்தம்!
, வியாழன், 17 அக்டோபர் 2019 (13:28 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். 


 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன்.  இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.  
 
சமீபத்தில் தெலுங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மது  பேசிய அவர்  “நான் இனி குடிக்க மாட்டேன். இரண்டு வருடங்கள் ஆகின்றன. நான் இப்போது நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன்” என்றார் ஷ்ருதி ஹாசன். அதைத் தொடர்ந்து அவருக்கு, எப்படி குடிப்பழக்கம் வந்தது என்பதைப் பற்றிய செய்திகள் கோலிவுட் , டோலிவுட்டில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில்,  ”இனி குடிக்காமல், நான் நிதானமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என்று சொன்னது ஏன் வேறுமாதியாக பார்க்கப்படுகிறது?” குடி பழக்கம் என்பது இன்றைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி.  ஆனால், அதை நான் மீண்டும் மீண்டும் செய்ய விரும்பவில்லை. இங்கு குடிப்பவர்கள் பல பேர் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இது  2019-ல் கேலிக்குரிய ஒன்று. என மன வருத்தத்துடன் குறிப்பிட்டு பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியா பவனி ஷங்கர் ரீசன்ட் க்ளிக்ஸ்!