சென்னை ஸ்டோரி திரைப்படத்தில் இருந்து சமந்தாவுக்கு பின், ஸ்ருதிஹாசனும் விலகியுள்ளார். இதற்குப் பிறகு, விரைவில் புதிய நாயகியைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி எழுதிய அரேஞ்மென்ட் ஆஃப் லவ் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆங்கிலத் திரைப்படத்திற்கு சென்னை ஸ்டோரி என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பாஃப்டா விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜான் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் நாயகியாக ஆரம்பத்தில் சமந்தா நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக இப்படத்தை விட்டு விலகினார். இதற்குப் பிறகு, ஸ்ருதிஹாசன் அவருக்கு பதிலாக ஒப்பந்தமாகினார். தற்போது, அதே கால்ஷீட் தேதிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக ஸ்ருதிஹாசனும் விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
சென்னை ஸ்டோரி மட்டுமன்றி, ஸ்ருதிஹாசன் ஆத்வி சேஷுடன் நடித்து வரும் டாகோயிட் திரைப்படத்திலிருந்தும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.