Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மையோசிட்டீஸ் பிரச்சனையோடு ஞாபக மறதியும் சேர்ந்துகொண்டது… சமந்தா பகிர்ந்த தகவல்!

Advertiesment
மையோசிட்டீஸ் பிரச்சனையோடு ஞாபக மறதியும் சேர்ந்துகொண்டது… சமந்தா பகிர்ந்த தகவல்!

vinoth

, திங்கள், 21 அக்டோபர் 2024 (16:33 IST)
சமந்தா, பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து  தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் ஆக்‌ஷன் மற்றும் கிளாமர் காட்சிகளில் அதிகமாக நடிக்க உள்ளாராம் சமந்தா. அதனால் அவருக்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இருமடங்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த தொடர் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமந்தா ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார்.

அதில் “இந்த தொடரில் நடிக்கும்போதுதான் எனக்கு மையோசிட்டீஸ் இருப்பது தெரியவந்தது. அதோடு ஞாபக மறதியும் சேர்ந்துகொண்டது. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலரின் பெயர்களை மறந்துவிடுவேன். மையோசிட்டீஸ் நோய் இருந்தால் தலைவலி, குழப்பம் வாந்தி மயக்கம் எல்லாம் இருக்கும் என்று சொல்வார்கள். அதனோடுதான் தினமும் போராடி வருகிறேன். 

அதனால் இந்த தொடரில் நடிக்க முடியாது என நான் இயக்குனர்களிடம் கூறினேன். எனக்குப் பதில் வேறொரு நடிகையையும் பரிந்துரைத்தேன். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்ததால் கஷ்டப்பட்டு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரச்சனைகள் பற்றி தெரிந்தும் மோகன்லால் அமைதியாக இருந்தார்.. பிரித்விராஜின் அம்மா குற்றச்சாட்டு!