Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி வெளியேறினார் என்பது பொய்! சுந்தர் சி

Advertiesment
, திங்கள், 29 மே 2017 (23:29 IST)
சுந்தர் சி இயக்கவுள்ள பிரமாண்டமான சரித்திர படமான 'சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சுந்தர் சியின் இயக்குனர் டீம் இந்த தகவலை மறுத்துள்ளது



 


சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் தானாகவே வெளியேறவில்லை. நாங்கள் தான் அவரை படத்தில் இருந்து நீக்கினோம். அவராக இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது பொய்யான தகவல். அவரை இந்த படத்தில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒருசில காரணங்களை கூறியுள்ளோம். மீதி காரணங்களை நாகரீகம் கருது கூறவில்லை. எனவே ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து வெளிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்' என்று கூறினர்.

மேலும் இந்த படத்திற்கு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பல முன்னணி நடிகைகள் விலகி சென்றுவிட்டனர். இதனால் யாரை ஸ்ருதிஹாசன் இடத்தை நிரப்புவது என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசைஞானி பிறந்த நாளில் சிம்பு செய்யும் மரியாதை