Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகள், மருமகனுடன் கமல்: வைரலாகும் புகைப்படம்

Advertiesment
மகள், மருமகனுடன் கமல்: வைரலாகும் புகைப்படம்
, புதன், 6 டிசம்பர் 2017 (13:26 IST)
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் 'மைகேல் கோர்சலே என்பவரை காதலிப்பதாகவும், இவர்களது திருமணத்திற்கு ஸ்ருதிஹாசனின் தாயார் சரிகா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்று கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதிக் கண்ணதாசனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் வருகை தந்திருந்தார்
 
இந்த நிலையில் இதே விழாவுக்கு வருகை தந்திருந்த கமல்ஹாசனிடம் ஸ்ருதிஹாசன் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் வருங்கால மருமகன் மைகேல் கோர்சலே ஆகியோருடன் கமல் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மைக்கேல் கோர்சலே-ஸ்ருதிஹாசன் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலைக்காரன் படத்தின் புரோமோ வீடியோ