Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் திறக்கப்படுகிறது கமல் கண்டுபிடித்த குணா குகை

Advertiesment
மீண்டும் திறக்கப்படுகிறது கமல் கண்டுபிடித்த குணா குகை
, திங்கள், 13 நவம்பர் 2017 (23:59 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த 'குணா' படத்தில் 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். மிக பிரபலமான இந்த பாடல் கொடைக்கானலில் உள்ள ஒரு குகையில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் தீவிர தேடலுக்கு பின்னர் கமல் கண்டுபிடித்த இந்த குகைக்கு பேய் குகை என்ற பெயர் இருந்தது.


 


ஆனால் 'குணா' படம் வெளியான பின்னர் இந்த குகைக்கு 'குணா குகை' என்ற பெயர் நிலைத்துவிட்டது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தவறாது இந்த குகையை பார்த்து வந்தனர். ஆனால் இந்த குகைக்கு செல்லும் பாதையும், குகை இருந்த இடமும் ஆபத்து நிறைந்ததாக இருந்ததால் பலர் உயிரிழக்க நேர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு இந்த குகை மூடப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் தற்போது இந்த குணா குகைக்கு செல்ல மரப்படிகள் அமைத்துள்ளது. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் வெகுவிரைவில் இந்த குகை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசாரணை முடிந்து வீடு திரும்பினார் விவேக்