சில பேர் செட்ல மைக்கக் கூட உடைப்பாங்க… ஆனா லோகேஷ்? –ஸ்ருதிஹாசன் ஆச்சர்யம்!

vinoth
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (10:47 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் நிறைந்த ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் பணி செய்யும் பாணி குறித்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன். அதில் “செட்டில் இருக்கும்போது இயக்குனர்கள் அதிகமாகக் கோபப்படுவார்கள். சில பேர் மைக்கைக் கூட உடைப்பதை நான் பார்த்துள்ளேன். ஆனால் லோகேஷ் ரொம்ப அமைதியாக வேலை செய்வார். ஆனால் நடிகர்களிடம் தனக்கு வேண்டியதை வாங்காமல் விடமாட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுதாரித்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள்.. இனிமேல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்?

வெற்றிமாறன் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளரா? ஜிவி பிரகாஷ் கூட்டணி முறிவா?

தாய்லாந்தில் சிம்பு - லோகேஷ் எதிர்பாராத சந்திப்பு.. புதிய கூட்டணி உருவாகிறதா?

ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன்: ரூ.15 கோடி விவகாரம் குறித்து ஷில்பா ஷெட்டி எச்சரிக்கை..!

தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' திரைப்படத்தின் இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணனின் பிரத்யேக நேர்காணல்!

அடுத்த கட்டுரையில்
Show comments