Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் முதல் லுக் ரிலீஸ்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் முதல் லுக் ரிலீஸ்!
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:58 IST)
இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.

நேர்கொண்ட பார்வை மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத் இப்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான மாறா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இப்போது அவர் கலியுகம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விளம்பரப் படங்களை இயக்கியுள்ள பிரமோத் சுந்தர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரத்தா மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா. ஸ்ரத்தாவைத் தவிர அனைவரும் புதுமுகங்களாக இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகளை இப்போது படக்குழு மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட, அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படத்தில் எஸ் ஜே சூர்யா வேடம் என்ன? – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!