Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகர் மீது செருப்பு வீச்சு !

Advertiesment
darshan
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (17:57 IST)
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன். இவர்  நடித்துள்ள படம் கிராந்தி. இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் புரமோசனில் நடிகர் தர்ஷன் இன்று ஈடுபட்டிருந்தார்.

பெங்களூரில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். அது தர்ஷனின் தோளில் பட்டுக் கீழே விழுந்தது.

இதனால், ஆத்திரம் அடைந்த  நபர்கள் செருப்பு வீசிய நபரைக் கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

சில நாட்களுக்கு முன் பெண்களைப் பற்றி  நடிகர் தர்ஷன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு பட 3 வது சிங்கில் 'Soul Of Varisu ' ரிலீஸ்